கோயில்களை திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை- தமிழக அரசு

ஊரடங்கு உத்தரவால் தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கோயில் தேவஸ்தானம் வாரியத்துக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 68 நாட்களாக நீடித்து வந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு கடந்த 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதகளில் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக வரும் 8ம் தேதி முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்ட்ராண்ட், ஹோட்டல்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் நாளை முதல் வழிபாட்டுத் தலங்களையும் திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை திறக்கப்படவுள்ள உணவகங்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும், குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் உணவகங்கள் திறக்கப்படும் மேலும் நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உணவகங்கள் திறக்கப்படாது என சென்னை ஓட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Most Popular

அம்மன் அருளை அள்ளி தரும் ஆடி மாதம்… ஆடி மாத சிறப்புகள் இதோ!

ஆடி மாதம் பிறந்து விட்டது . அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களைகட்ட தொடங்கவிடும் . ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் . ஆடிமாதத்தில் சிவன் சக்தியில்...

உலகளவில் 1.34 கோடி பேருக்கு கொரோனா..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை...

மெடிக்கலில் பாரசிட்டமால் மாத்திரை!- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் பாரசிட்டமால் மாத்திரை வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து...

`தூக்க நிலைக்கு செல்ல வைத்தார்; ஜிம்னாஸ்டிக் வீராங்கனையிடம் பாலியல் சில்மிஷம்!’- எஸ்கேப் ஆன பயிற்சியாளர் கைது செய்த போலீஸ்

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு மனஅழுத்தம் பயிற்சி கொடுக்க வந்த பயிற்சியாளர் பாலியல் சில்மிஷம் கொடுத்துள்ளார். சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பயிற்சியாளரை கைது செய்தனர். சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூர் உத்தண்டி...
Open

ttn

Close