காந்திக்கு கோயில் கட்டி வழிபாடு – சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம் !

காந்திக்கு கோயில் கட்டி வழிபாடு – சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம் !

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே மகாத்மா காந்தி சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம் நடத்தி வழிபாடு செய்யப்பட்டது.

காந்திக்கு கோயில் கட்டி வழிபாடு – சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம் !

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி செந்தாம்பாளையத்தில் வசித்தவர் வையாபுரி. இவர் மகாத்மா காந்தியின் மீது கொண்ட
பற்று காரணமாக 1997 ஆண்டு மகாத்மா காந்திக்கும் – கஸ்தூரிபாய் அம்மையாருக்கும் தனித்தனியாக கோயில் கட்டி வழிபட்டு வந்தார்.

காந்திக்கு கோயில் கட்டி வழிபாடு – சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம் !

இந்த கோயிலில் ஆண்டுதோறும் குடியரசு தினம். சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
அதன் அடிப்படையில், அக்டோபர் 2ஆம் நாளான இன்று மகாத்மா காந்தி சிலைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம்,
நெல்லிப்பொடி, பன்னீர், இளநீர் மற்றும் புனித நீர் ஊற்றி, மந்திரம் முழங்க அபிஷேகம் மற்றும் ஆராதனை
நடைப்பெற்றது.

காந்திக்கு கோயில் கட்டி வழிபாடு – சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம் !

அதனை தொடர்ந்து காந்தி சிலைக்கு கதர் ஆடை, கண் கண்ணாடி அணிவித்து, விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு
சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு
இனிப்பு வழங்கினார்.

காந்திக்கு கோயில் கட்டி வழிபாடு – சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம் !

இந்த கோயிலை கட்டிய வையாபுரி , கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் காலமானதையடுத்து அவரது மகன் தங்கராஜ் தற்போது இந்த பணிகளை தொடர்ந்து வருகிறார்.