26 மாவட்டங்களில் வெப்பநிலை உச்சத்தை தொடும் : உஷார் மக்களே!!

26 மாவட்டங்களில் வெப்பநிலை  உச்சத்தை தொடும் : உஷார் மக்களே!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை உயர்வதால் அனல்காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

26 மாவட்டங்களில் வெப்பநிலை  உச்சத்தை தொடும் : உஷார் மக்களே!!

வங்கக்கடலில் நிலவும் தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக வலுபெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அந்தமான் ஓட்டிய கடல் பகுதிக்கு அடுத்த 24 மணி நேரம் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் இன்று முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

26 மாவட்டங்களில் வெப்பநிலை  உச்சத்தை தொடும் : உஷார் மக்களே!!

சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசப்படும். இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் ,புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட நான்கிலிருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.