இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரிக்கும்!

 

இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரிக்கும்!

தமிழகத்தில் பனிக்கலாம் முடிந்து இன்னும் ஒரு சில மாதங்களில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், இப்போதே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. இன்னும் கத்திரி வெயிலின் போது எப்படி இருக்குமோ என மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வளிமண்டலத்தில் காற்று சுழற்சி இல்லாததால் மார்ச் 3ம் தேதி வரையில் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறினார்.

இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரிக்கும்!

கரூர் மாவட்டம் பரமத்தியில் அதிகபட்சமாக 100 டிகிரியும், சேலம் மற்றும் நாமக்கல்லில் 99 டிகிரியும் வேலூர், திருச்சி, தருமபுரி ஆகிய இடங்களில் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல் மற்றும் மதுரையில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.