தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்.. இதில் உங்க மாவட்டமும் இருக்கா?!

 

தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்.. இதில் உங்க மாவட்டமும் இருக்கா?!

தமிழகத்தில் கத்திரி வெயில் ஒரு காட்டம் காட்டி வருகிறது. இது போதாதென்று, வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தையும் இழுத்து சென்று விட்டது. இதனால் வெயில் 100 டிகிரியையும் தாண்டி, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 110.8 டிகிரியும், இன்று 13 இடங்களில் 100 டிகிரி வெயிலும் பதிவானது. இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்.. இதில் உங்க மாவட்டமும் இருக்கா?!

வெப்பம் அதிகமாகி 104 டிகிரியை எட்டும் என்பதால் மக்கள் காலை 11 முதல் மாலை 3 வரை வெளியே செல்ல வேண்டாம் என்று சென்னை உட்பட கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர் மற்றும் தருமபுரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வெயில் படிப்படியாக குறையும் என்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வெப்பச் சலனத்தால் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.