• July
    22
    Monday

Main Area

Main



பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகர்: அபராதம் விதித்த காவல்துறை !

நடிகர் ராம்
நடிகர் ராம்
Loading...

ஐதராபாத்: பொது இடத்தில் புகைபிடித்த பிரபல  நடிகருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். 

ram

தமிழில் கருணாகரன் இயக்கிய  ஏனென்றால் காதல் என்பேன் என்ற படத்தில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம். இவர் தற்போது  புரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும்   ஸ்மார்ட் சங்கர் படத்தில் நடித்து வருகிறார்.  இதில் இவருக்கு ஜோடியாக  நிதி அகர்வால் நடிக்கிறார். 

ram

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்  சார்மினார் அருகே நடந்தது. அப்போது நடிகர் ராம் புகைபிடிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதைக்கண்ட சார்மினார் போலீசார் பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்திற்காக நடிகர் ராமுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.  இந்த தொகையை படக்குழுவினர் செலுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.