விபத்தில் சிக்கிய பிரபல காமெடி நடிகர்!

 

விபத்தில் சிக்கிய பிரபல காமெடி நடிகர்!

2020 தொடக்கத்திலிருந்தே நம்மை கொரோனா படாத பாடு படுத்திவருகிறது. தொற்றுக்கு மருந்து இன்னும் முழுமையாக கடைப்பிடிக்காததால் தினமும் ஏராளமானோர் உயிரிழந்துவருகின்றனர். இதுவரை கொரோனாவால் உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் உ யிரிழந்தனர். கொரோனா தாக்கம் மறைவதற்குள் கேரளாவில் விமான விபத்து, மும்பை, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் கனமழை என ஏராளமான பேரிடர்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. கொரோனா தொற்றால் சினிமா உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் முடங்கி, மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.

விபத்தில் சிக்கிய பிரபல காமெடி நடிகர்!

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் 3 0 வரு ட காலமாக நடித்துவரும் காமெடி நடிகர் ப்ருத்வி ராஜ், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் மோதி விபத்தில் சிக்கினார். இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இருப்பினும் ப்ருத்வி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.