ஆம்பன் புயல் பாதிப்பு: மேற்கு வங்கத்தில் நாளைக்குள் 90 சதவீத தொலைதொடர்பு சேவைகள் இயங்கும்

 

ஆம்பன் புயல் பாதிப்பு: மேற்கு வங்கத்தில் நாளைக்குள் 90 சதவீத தொலைதொடர்பு சேவைகள் இயங்கும்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாளை மாலைக்குள் 90 சதவீத தொலைத்தொடர்பு சேவைகள் இயங்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் ஏற்பட்ட ஆம்பன் புயல் மேற்கு வங்க மாநிலத்தை பயங்கர சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. ஆம்பன் புயலால் அம்மாநிலத்தில் 86 பேர் பரிதாபமாக பலியாகினர். மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிவாரண நிதியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில், ஆம்பன் புயலால் தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகள் தடைபட்டன. ஆனால் இன்று 65 முதல் 70 சதவீத தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் இயங்கின என இந்திய செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் (சிஓஏஐ) தெரிவித்துள்ளது. ஆம்பன் புயலால் அம்மாநிலத்தில் தொடர்ச்சியான மின் தடைகள், அடிக்கடி ஃபைபர் வெட்டுக்கள் மற்றும் சாலைகளில் மின்சார கம்பிகள் அறுந்து விழுவது போன்றவை நிகழ்ந்தன.

ஆம்பன் புயல் பாதிப்பு: மேற்கு வங்கத்தில் நாளைக்குள் 90 சதவீத தொலைதொடர்பு சேவைகள் இயங்கும்

அம்மாநிலத்தில் தொலைதொடர்பு நெட்வொர்க்குகளை மீட்டெடுக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. நாளை மாலைக்குள் 90 சதவீத தொலைதொடர்பு சேவைகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்கள் ஆம்பன் சூறாவளியால் மோசமாக பாதிக்கப்பட்டன. சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 8,500 மொபைல் கோபுரங்கள் உள்ளன. தொலைதொடர்பு மறுசீரமைப்பு பணிகளுக்காக பாரதி ஏர்டெல் சுமார் 100 பேரை அம்மாநிலத்தில் பணியமர்த்தியுள்ளது.