இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த சந்தோஷ் பாபு குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி நிதி!

இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த சந்தோஷ் பாபு குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி நிதி!

இந்தியா – சீனா எல்லையில் கடந்த திங்கட்கிழமை இரவு இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டையை சேர்ந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு உட்பட இந்தியாவை சேர்ந்த ரானுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டுக்காக என் மகன் உயிர் தியாகம் செய்திருப்பதற்காக பெருமைப்படுவதாகவும், ஒரே மகனை இழந்தது வேதனையாக இருப்பதாகவும் சந்தோஷ் பாபுவின் தாயார் மஞ்சுளா தெரிவித்தார்.

இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த சந்தோஷ் பாபு குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி நிதி!

இந்நிலையில் லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் வழங்கினார். மேலும் சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ஒரு வீடு, அவரது மனைவிக்கு குரூப்-1 அரசு பணி தரவும் தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.