சீனத் தயாரிப்புகள் மற்றும் செயலிகள் பயன்படுத்துவதை நிறுத்திய போலீஸ் பயிற்சி கல்லூரி!

 

சீனத் தயாரிப்புகள் மற்றும் செயலிகள் பயன்படுத்துவதை நிறுத்திய போலீஸ் பயிற்சி கல்லூரி!

சமீபத்தில் லடாக்கில் சீன ராணுவம் 20 இந்திய வீரர்களைக் கொன்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் சீன தயாரிப்புகளைப் புறக்கணித்து வருகின்றனர்.

தற்போது தெலுங்கானா கரீம்நகர் போலீஸ் டிரைனிங் காலேஜில் சீனா பொருட்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த போலீஸ் பயிற்சி கல்லூரியில் 800 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் 150 ஊழியர்களும் சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.

சீனத் தயாரிப்புகள் மற்றும் செயலிகள் பயன்படுத்துவதை நிறுத்திய போலீஸ் பயிற்சி கல்லூரி!

போலீஸ் பயிற்சி கல்லூரி இன்சார்ஜ் ஜி. சந்திரமோகன், பயிற்சியாளர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ இதுகுறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார். இது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும், அதை ஏற்றுக்கொண்டு பெரும்பாலோர் வரவேற்று சீன பயன்பாடுகளைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு “சீன தயாரிப்புகள் மற்றும் பயன்பாடுகளை புறக்கணிப்பதன் மூலம் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு சீனா மீது தங்கள் கோபத்தை காண்பிக்க முடியும் என்று கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

சீனத் தயாரிப்புகள் மற்றும் செயலிகள் பயன்படுத்துவதை நிறுத்திய போலீஸ் பயிற்சி கல்லூரி!

சீனாவை பொருளாதார ரீதியாக பாதிக்க டிக்டோக் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே ஜூன் 20 அன்று அழைப்பு விடுத்தார். 15 கோடி இந்தியர்கள் சீன பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறார்கள், இதனால் அந்த நாடு கோடிகோடியாக இலாபம் ஈட்டி வருகின்றன. எனவே சீனத் தயாரிப்புகள் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.