கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படும் மத்திய சிறை!

 

கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படும் மத்திய சிறை!

தெலங்கானாவில் மருத்துவமனைக்காக மத்திய சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படும் மத்திய சிறை!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரின் முக்கிய பகுதியில் வாரங்கல் மத்திய சிறைச்சாலை உள்ளது. சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிறைச்சாலையில் 956 கைதிகள் உள்ளனர். இதில் 571 ஆயுள் தண்டனை கைதிகளும், 305 இதர வழக்குகளில் தொடர்புடையவர்கள், 80 பெண் கைதிகள் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இட வசதி இல்லாததால், அனைத்து நோயாளிக்கும் சிகிச்சையளிக்கும் வகையில், தெலங்கானாவிலுள்ள மத்திய சிறையை இடமாற்றம் செய்து, அவற்றை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

130 ஆண்டுகள் பழமையான வாரங்கல் மத்திய சிறைச்சாலையில், 956 கைதிகள் உள்ள நிலையில், கைதிகளை வெவ்வேறு இடத்திற்கு மாற்றம் செய்து, சிறைச்சாலையை ஒரு மாதத்திற்குள் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்க முதலமைச்சர், சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், சிறை கைதிகளை வேறு இடத்திற்கு சிறைத்துறை அதிகாரிகள் மாற்றி வருகின்றனர்.