கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை சுமையாக கருதும் தெலங்கானா அரசு! – தமிழிசை காட்டம்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை சுமையாக கருதும் தெலங்கானா அரசு! – தமிழிசை காட்டம்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது தெலங்கானா அரசுக்கு சுமையாக மாறிவிட்டதோ என்று தோன்றுகின்றது என்று ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கொரோனா வேகமாக பரவும் நிலையில் அம்மாநில அரசுகள் சரியாக அதை கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெலங்கானா அரசு இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட உத்தரவிடும்படி தெலங்கான உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை சுமையாக கருதும் தெலங்கானா அரசு! – தமிழிசை காட்டம்
அதில், “கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தெலங்கானா அரசு மெத்தனமாக செயல்படுகிறது. இது தொடர்பாக அரசுக்கு 5, 6 முறை கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் எந்த பலனும் இல்லை. கொரோனா பரிசோதனையை அதிகரித்தால் மட்டுமே தொற்றைக் கண்டறிந்து ஒழிக்க முடியும். நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தெலங்கான அரசு அதை செய்யவில்லை. கண்டோன்மெண்ட் பகுதிகளில் கூட அரசு அலட்சியமாக நடந்துகொள்கிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை சுமையாக கருதும் தெலங்கானா அரசு! – தமிழிசை காட்டம்
போதுமான சிகிச்சை இல்லை, மருத்துவமனைகளில் பாதுகாப்பு, சுகாதாரம் இல்லை. இதனால் மக்கள் வெறுத்துப்போய் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர்.
அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது அரசுக்கு சுமையாக மாறிவிட்டது போலத் தோன்றுகிறது. இது பற்றி முதல்வரிடம் பேசும்போது சற்று காட்டமாகவே கூறினேன்” என்றார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை சுமையாக கருதும் தெலங்கானா அரசு! – தமிழிசை காட்டம்
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியில் உள்ளது. இதற்கும் பா.ஜ.க-வுக்கும் கூட்டணி இல்லை. ஆனால், மத்திய அரசுடன் இணக்கமான போக்கையே சந்திரசேகர ராவ் கடைபிடித்து வருகிறார். இருப்பினும் ஆளுநராக வந்த தமிழிசைக்கும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் சரியான பேச்சு வார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது முதல் முதல்வருக்கும் ஆளுநருக்குமான பனிப்போர் நடந்து வருகிறது. இந்த பேட்டி மூலம் இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.