3 மாத சம்பளத்தை கொடுக்கலாமே? நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை

 

3 மாத சம்பளத்தை கொடுக்கலாமே? நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராக உள்ளார். அத்துடன் புதுச்சேரி கூடுதல் பொறுப்பு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா தாக்கம் தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தமிழிசை கொரோனா குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி வருவதுடன் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார்.

3 மாத சம்பளத்தை கொடுக்கலாமே? நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை

இந்த சூழலில் நெட்டிசன் ஒருவர், உங்களுடைய மூன்று மாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கலாமே என தமிழிசை சௌந்தராஜனை பார்த்து வினவியுள்ளார். அதில், ’வாழ்வாதாரத்தை விட உயிர் முக்கியம் என்று கூறும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களே, உங்களுடைய மூன்று மாத வருமானத்தை பிரதமர் நலநிதி அனுப்பலாமே? என்று கேள்வி கேட்டிருந்தார். இதை கண்ட தமிழிசை சௌந்தராஜன், ” கொரோனா நிதி பங்களிப்பாக எனது ஊதியத்திலிருந்து மார்ச், 2020 லிருந்து மாதம் 1 இலட்சம் வீதம் இதுவரை 12 இலட்சம் ரூபாய் கொரோனா நிதிக்கு எனது பங்களிப்பாக பிரதமர் நிதிக்கு அனுப்பி வருகிறேன்.மேலும் எனது ஒரு மாத முழு ஊதியத்தையும் தெலுங்கானா முதலமைச்சர் நிதிக்கு வழங்கியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழிசையின் பதிவுக்கு பதிலளித்த அந்த இளைஞர், ” அதில் பாதியை தங்களை நம்பி என்னை திட்டிக்கொண்டிருக்கும் மக்களுக்கும், புதுவை,தெலுங்கானா மக்களுக்கும் அளித்து உதவுங்கள்… ” என்று பதிலளித்துள்ளார்.