ஆளுநராக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிங்கப்பெண் ‘தமிழிசை’… குவியும் வாழ்த்துக்கள்!

 

ஆளுநராக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிங்கப்பெண் ‘தமிழிசை’… குவியும் வாழ்த்துக்கள்!

பாஜகவில் அடிப்படை உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய தமிழிசை சவுந்தரராஜன் அதன்பிறகு பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். சவால் நிறைந்த தமிழக அரசியலில் சுமார் 5 ஆண்டுகள் தமிழக பாஜகவின் தலைவராக பதவி வகித்த தமிழிசை, பல்வேறு சமயங்களில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் அவர்களுக்கான பதிலை தெளிவாகக் கூறி அசராமல் வலம்வந்தவர்.

ஆளுநராக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிங்கப்பெண் ‘தமிழிசை’… குவியும் வாழ்த்துக்கள்!

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த ஆண்டு இதே நாளில் தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றார். ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுத்துக்கொண்டார். மருத்துவரான தமிழிசையை சாமானிய மக்கள் கூட எளிதில் பார்க்கலாம். ஆளுநரானதும் தெலங்கானா ஆளுநர் மாளிகையை பசுமை சூழலுக்கு மாற்றினார். ஓர் ஆண்டிலேயே தெலங்கு மொழியை கற்றுக்கொண்டு, அந்நாட்டு மக்களோடும், மருத்துவர்களோடும் நட்பு பாரட்டினார்.

இந்நிலையில் தெலுங்கானா ஆளுநராக வெற்றிகரமாக ஒரு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி இன்று இரண்டாம் ஆண்டுபணி துவங்குவதை ஒட்டி தமிழிசைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.