நான் இன்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.. முடிவு வந்தது- தமிழிசை ட்வீட்

 

நான் இன்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.. முடிவு வந்தது- தமிழிசை ட்வீட்

தெலங்கானா மாநிலத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமாகி வீட்டுக்கு வந்து விட்டனர். தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 300 க்கும் அதிகமானோர் இறந்து விட்டனர். நாட்டின் மற்ற மாநிலங்களை போலவே தெலங்கானா மாநிலத்திலும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் போன்றோர் போராடி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா மாநில மருத்துவர்களை ஊக்குவிக்கும் விதமாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று பாராட்டிவருகிறார். மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களையும் அவர் நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இதுகுறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இன்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். முடிவு எதிர்மறையான என வந்தது. சிவப்பு மண்டலங்களில் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை தயவுசெய்து முறையிடுகிறேன். ஆரம்பகால நோயறிதல் நம்மை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பாதுகாக்கிறது. தயங்க வேண்டாம்! உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். மற்றவர்களை ஊக்குவிக்கவும்! அருகிலுள்ள சுகாதார மையத்தை தொடர்பு கொண்டு தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.