மருத்துவர்களை நேரில் சந்தித்து ஊக்குவித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

 

மருத்துவர்களை நேரில் சந்தித்து ஊக்குவித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

ஹைதராபாத்: தெலங்கானாவில் கொரோனாவால் பாதித்த மருத்துவர்களை அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து பேசினார்.

தெலங்கானா மாநிலத்தில் 3496 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 1710 பேர் குணமாகி வீட்டுக்கு வந்து விட்டனர். தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 123 பேர் இறந்து விட்டனர். நாட்டின் மற்ற மாநிலங்களை போலவே தெலங்கானா மாநிலத்திலும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் போன்றோர் போராடி வருகின்றனர்.

மருத்துவர்களை நேரில் சந்தித்து ஊக்குவித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா மாநில மருத்துவர்களை ஊக்குவிக்கும் விதமாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று பாராட்டினார். மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களையும் அவர் நேரில் சந்தித்து பேசினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

“தெலுங்கானாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தும் வகையில் நேரில் சந்தித்து அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர்கள் மக்களுக்கு ஆற்றும் பணி வெகுவாக பாராட்டத்தக்கது” என தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.