வங்கக் கடலில் மையம் கொண்ட புயல்… தெலுங்கானாவில் அடித்து வெளுக்கப் போகும் மழை!

 

வங்கக் கடலில் மையம் கொண்ட புயல்… தெலுங்கானாவில் அடித்து வெளுக்கப் போகும் மழை!

தெலுங்கானாவின் பல பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய ஏற்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு துறை அதிகாரி ராஜா ராவ், தெலுங்கானாவில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

சூர்யாபேட்டை, நல்கொண்டா, கம்மம், பத்ராத்ரி-கோத்தகுடெம், முலுகு, வாரங்கல் கிராமப்புற, வாரங்கல் நகர, விகராபாத், ரங்காரெட்டி, மேட்சல்-மல்காஜ்கிரி, ஹைதராபாத், சங்கரெட்டி, மேடக், சத்ய்பேக், நார்த் -போங்கிர், மஹாபுப்நகர் மற்றும் மகாபூபாபாத் மாவட்டங்கள் ஆகிய இடங்கள் கனமழையைப் பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் மையம் கொண்ட புயல்… தெலுங்கானாவில் அடித்து வெளுக்கப் போகும் மழை!
வங்காள விரிகுடாவின் மேற்கு  மற்றும் வடமேற்கு பகுதிகளில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் ஆந்திராவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் மற்றும் ஒரிசாவின் தெற்குக் கடற்கரைப் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 7.6 கிலோ மீட்டர் மேலே உருவாகியுள்ளது. இந்த புயல் காரணமாக தெலுங்கானாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.