• March
    28
    Saturday

Main Area

Main



கைவிலங்கோடு அழைத்து வரப்பட்ட மகன்கள்... அதிர்ச்சியில் உயிரைவிட்ட பெற்றோர்!

death
death

ஐதராபாத்தில் கலவரத்தை வேடிக்கை பார்த்த தங்கள் மகன்கள் கைது செய்யப்பட்டதால் துக்கம் காரணமாக அவர்களது பெற்றோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் அப்துல் அகத் பன்சாரி (73). இவரது மனைவி அகமதி பேகம் (65). இவர்களுக்கு அப்துல் காசிப் (24), அப்துல் ஆசிப் (21) என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

cuff

ஐதராபாத்தில் கடந்த 12ம் தேதி வன்முறைச் சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் காசிப், ஆசிப்பை கடந்த 13ம் தேதி ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். இவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை, வீட்டுக்கு அருகே நடந்த கலவரத்தை வேடிக்கை பார்க்க மட்டுமே சென்றனர் என்று இவர்களின் பெற்றோர் கூறிவந்தனர். 
இவர்கள் எந்த குற்றமும் செய்ய வில்லை என்று போலீஸ் நிலையத்தில் கூறியபோது அதை போலீசார் ஏற்கவில்லை. ஜாமீனில் எடுக்க முயன்றபோதும் அதிலும் வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் தங்கள் மகன்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வர உள்ளதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர்கள், தங்கள் மகன்களைப் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது கைவிலங்கோடு அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துவந்துள்ளனர். இதைப் பார்த்ததுமே அப்துல் அகத் பன்சாரிக்கு ஒருமாதிரியாக ஆகிவிட்டது. அவரை அவரது மனைவி அகமதி அமைதிபடுத்தி வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார்.

dead

வீட்டுக்கு வந்து வேதனையிலிருந்த முதியவர் அப்துல் அகத் மனைவியிடம் கூட பேசாமல் படுக்கைக்கு சென்றுவிட்டார். காலையில் பார்த்தால் அவர் இறந்து கிடந்தார். இது அறிந்த சில மணி நேரங்களில் அவரது மனைவியும் உயிரிழந்தார். திடீர் இதய செயலிழப்பு காரணமாக முதியவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  பெற்றோரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மகன்களுக்கு அனுமதி அளிக்கும்படி பெயில் கேட்டு உறவினர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.