தெலங்கானாவில் எம்.எல்.ஏ, அமைச்சரின் உதவியாளருக்கு கொரோனா!

 

தெலங்கானாவில் எம்.எல்.ஏ, அமைச்சரின் உதவியாளருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இங்கு கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. உலகிலேயே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்திலுள்ளது. இந்தியாவில் தற்போதுவரை 3,24,482 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் இதுவரை 4, 737 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,352 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் 182 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானாவில் எம்.எல்.ஏ, அமைச்சரின் உதவியாளருக்கு கொரோனா!

தெலுங்கானா ஜங்கான் தொகுதி எம்எல்ஏ பாகிரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் தெலங்கானா நீர்வளத்துறை அமைச்சரின் உதவியாளர் மற்றும் ஹைதராபாத் மேயரின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பல்வேறு நலத்திட்ட மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதே கொரோனா தொற்றுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக தெலங்கானாவ்ல் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்கும், நிதியமைச்சர் ஹரீஷ் ராவின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.