தெலங்கானா: மருத்துவமனையில் கவனிப்பு இல்லை என்பதால் கோவித்துக் கொண்டு சென்ற கொரோனா நோயாளி!

தெலங்கானா: மருத்துவமனையில் கவனிப்பு இல்லை என்பதால் கோவித்துக் கொண்டு சென்ற கொரோனா நோயாளி!

தெலங்கானாவில் மருத்துவமனையில் சரியான கவனிப்பு இல்லை என்பதால் மருத்துவமனையில் இருந்து கொரோனா வெளியேறி தன்னுடைய வீட்டுக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா: மருத்துவமனையில் கவனிப்பு இல்லை என்பதால் கோவித்துக் கொண்டு சென்ற கொரோனா நோயாளி!

தெலங்கானா கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சரியான கவனிப்பு இல்லை, உணவு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் எதற்காக மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கருதிய அவர், அங்கிருந்து வெளியேறி தன்னுடைய வீட்டுக்கு பொடி நடையாக நடந்து சென்றார்.

தெலங்கானா: மருத்துவமனையில் கவனிப்பு இல்லை என்பதால் கோவித்துக் கொண்டு சென்ற கொரோனா நோயாளி!
நோயாளி ஒருவர் வெளியேறிய தகவல் மருத்துவமனை ஊழியர்களுக்குத் தெரிந்தது. உரிய அனுமதியின்றி அவர் வெளியேறியது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சிய அவர்கள், அவருடைய செல்போன் நம்பரைத் தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது, சரியான கவனிப்பு இல்லாத நிலையில் எதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரை சமாதானம் செய்து, எங்கிருக்கிறார் என்று கேட்டறிந்து ஆம்புலன்ஸை அனுப்பி அழைத்து வந்தார்.

தெலங்கானா: மருத்துவமனையில் கவனிப்பு இல்லை என்பதால் கோவித்துக் கொண்டு சென்ற கொரோனா நோயாளி!
அதே நேரத்தில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் ஆதர்ஷ்நகர் சாலையில் நடந்து செல்வதாக தகவல் வந்தது. கொரோனா பரவல் உள்ள நேரத்தில் உத்தரவை மீறி அவர் வெளியே திரிந்ததால் அவரை பிடித்து வந்து கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்த்துள்ளோம். அவர் நடந்து சென்ற ஆதர்ஷ் நகர் பகுதியில் கொரோனா பரவலைத் தடுக்க, மக்கள் வெளியேறுவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.