முழு லாக்டவுன் காலத்துக்கும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்யுங்க….தெலங்கானா முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்

முழு லாக்டவுன் காலத்துக்கும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்யுங்க….தெலங்கானா முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இந்த லாக்டவுனால் சாமானிய மனிதர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் பாரபட்சம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக வறுமை கோட்டுக்கு கீழே குடும்பத்தினரின் நிலைமை மிகவும் கொடுமையானது.

முழு லாக்டவுன் காலத்துக்கும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்யுங்க….தெலங்கானா முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்

இந்த சூழ்நிலையில் தெலங்கானாவில் முழு லாக்டவுன் காலத்துக்கும் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெலங்கானா முதல்வருக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். உத்தம் குமார் ரெட்டி, முதல்வர் கே. சந்திரசேகர் ராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியியிருப்பதாவது: முழு லாக்டவுன் காலத்துக்கும், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

முழு லாக்டவுன் காலத்துக்கும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்யுங்க….தெலங்கானா முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்

மின் கட்டண முறையில் உள்ள அனைத்து தவறுகளையும் சரிசெய்து மற்றவர்களுக்கு மின் கட்டண தொகையில் பொருத்தமான அளவு குறைக்க வேண்டும். லாக்டவுன் காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பிக்சட், குறைந்தபட்சம் மற்றும் வழக்கமான மின் கட்டணங்களை 100 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும். வணிகத்தில் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் லாக்டவுன் தாக்கம் குறித்து அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் மற்றும் நிவாரண தொகுப்பையும் அறிவிக்க வேண்டும். லாக்டவுன் காலத்துக்கு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறிது நிவாரணம் அளிக்க வேண்டும் என எங்க கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் மாநிலம் முழுவதும் ஜூலை 6ம் தேதி (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.