வாங்க… வாங்க… பா.ஜ.க. எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவோம்… தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

வாங்க… வாங்க… பா.ஜ.க. எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவோம்… தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

தெலங்கானா இடைத்தேர்தலில் கிடைத்த தோல்வியின் எதிரொலியாக, பா.ஜ.க. எதிர்ப்பு முன்னணியை உருவாக்க தெலங்கான முதல்வர் கே சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் அண்மையில் இடைத்தேர்தல் நடந்த துப்பாக் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் டி.ஆர்.எஸ். (தெலங்கானா ராஷ்டிர சமிதி) கட்சி வேட்பாளர் சோலிபெட்டா சுஜாதாவை 1,470 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் எம். ரகுநந்தன் ராவ் தோற்கடித்தார்.

வாங்க… வாங்க… பா.ஜ.க. எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவோம்… தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்
கே சந்திரசேகர் ராவ்

இடைத்தேர்தலில் எளிதில் வெற்றி பெற்று விடுவோம் என்று மனக்கோட்டை கட்டி இருந்த முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு இந்த தோல்வி பெரிய அடியாக அமைந்தது. மேலும் அம்மாநில சட்டப்பேரவையில் பா.ஜ.க.வின் உறுப்பினர்கள் பலம் 2ஆக உயர்ந்தது. இது அந்த மாநிலத்தில் பா.ஜ.க. வளர்ச்சி கண்டு வருவதை வெளிப்படுத்துவதாக உள்ளது. பா.ஜ.க.வின் வளர்ச்சி சந்திரசேகர் ராவுக்கு கலக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வாங்க… வாங்க… பா.ஜ.க. எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவோம்… தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்
ரகுநந்தன் ராவ்

இதன் வெளிப்பாடாக பா.ஜ.க. எதிர்ப்பு முன்னணியை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் டி.ஆர்.எஸ்.பவனில் கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சந்திரசேகர் ராவ் பேசுகையில், இந்தியாவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்து தலைவர்களிடமும் பேசுவேன். டிசம்பர் 2வது வாரத்தில் ஹைதராபாத்தில் முதல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வோம். மோடி தலைமையிலான அரசுக்கு எதிரான நாம் நிற்போம் மற்றும் அதற்காக டி.ஆர்.எஸ். போராடும் என தெரிவித்தார்.