தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை 10 நாளா பார்க்க முடியவில்லை… உயர் நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை 10 நாளா பார்க்க முடியவில்லை… உயர் நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடந்த சில தினங்களாக பொதுஇடங்களில் பார்க்க முடியவில்லை. முதல்வர் சந்திரசேகர் ராவ் கடைசியாக கடந்த மாதம் 28ம் தேதியன்று மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு பொது இடங்களில் அவரை பார்க்க முடியவில்லை. கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் வேளையில், 10 நாட்களாக முதல்வரை பார்க்கமுடியவில்லை என்பதால் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை 10 நாளா பார்க்க முடியவில்லை… உயர் நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல்

இந்த சூழ்நிலையில், பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சியின் ஆங்கர் நவீன் குமார் என்ற மல்லண்ணா நேற்று மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் எங்கு இருக்கிறார் மற்றும் அவரது உடல் நலம் குறித்த விவரங்களை வெளியிட தெலங்கானா அரசுக்கு உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை 10 நாளா பார்க்க முடியவில்லை… உயர் நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல்

தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், மல்கஜ்கிரி எம்.பி.யுமான ரேவந்த் ரெட்டி டிவிட்டரில், தெலங்கானா முதல்வர் தொடர்பான மக்களின் அச்சத்தை போக்க அரசு அவரது உடல் நலம் தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும் என பதிவு செய்துள்ளார். கே. சந்திரசேகர் ராவ் மாநிலத்தை நிர்வகிக்கும் நிலையில் இல்லை என்றால் தனது பொறுப்புகளை வேறு எந்த தலைவரிடமும் ஒப்படைக்க வேண்டும். அது அவரது மகன் கே.டி. ராம ராவ் அல்லது மூத்த அமைச்சர்கள் டி ஹரிஷ் ராவ் அல்லது ஈதலா ராஜேந்தர் ஆகியோரிடம் பொறுப்பை வழங்கலாம் எனவும் அவர் பரிந்துரை செய்தார்.