இந்துக்கள் மீது கை வைத்தால் கையை வெட்டுவோம்.. தெலங்கானா பா.ஜ.க. தலைவர் சர்ச்சை பேச்சு

 

இந்துக்கள் மீது கை வைத்தால் கையை வெட்டுவோம்.. தெலங்கானா பா.ஜ.க. தலைவர் சர்ச்சை பேச்சு

பழைய ஹைதராபாத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் இந்துக்கள் மீது கை வைத்தால் கையை வெட்டுவோம் என தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஹைதராபாத்தில் செகந்திராபாத் அல்வாலில் பா.ஜ.க. கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார் பேசுகையில் கூறியதாவது: இந்த பழைய நகரத்தில் இந்துக்கள் பயத்தில் உள்ளனர். அவர்கள் உயிருடன் இருப்பார்களா இல்லையா என்ற கவலைப்படுகிறார்கள். நான் அண்மையில் பழைய நகரம் முழுவதையும் பார்வையிட்டேன்.

இந்துக்கள் மீது கை வைத்தால் கையை வெட்டுவோம்.. தெலங்கானா பா.ஜ.க. தலைவர் சர்ச்சை பேச்சு
பண்டி சஞ்சய் குமார்

இந்துக்களுக்கு நான் அவர்களுடன் இருக்கிறேன் என்று உறுதி அளித்தேன். தைரியமாக போராட சொன்னேன். பழைய நகரத்தில் ஒரு இந்துவின் மீது கை வைத்தால், புதிய நகரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் இங்கே ஒரு கையை வெட்டுவோம். பாக்ய நகரில் பாக்ய லெட்சுமி கோயிலில் காவி கொடி (பா.ஜ.க.) மட்டுமே பறக்க வேண்டும், பிங்க் (டி.ஆர்.எஸ்.) அல்லது பச்சை (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) அல்லது வேறு எந்த வண்ண கொடியும் பறக்க கூடாது.

இந்துக்கள் மீது கை வைத்தால் கையை வெட்டுவோம்.. தெலங்கானா பா.ஜ.க. தலைவர் சர்ச்சை பேச்சு
பாக்ய லெட்சுமி கோயில்

இந்துக்கள் இனவாதிகள் என்றும், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மதசார்ப்பற்றவர்கள் என்றும அழைக்கப்படுகிறார்கள். ஊடகங்கள் எங்கள் செய்திகளை பக்கங்களுக்குள் தள்ளுகின்றன. மற்ற கட்சிகளை முன்னிலைப்படுத்துகின்றன. இது போன்ற பக்கக்சார்பான ஊடகங்களை சமாளிக்க நாங்கள் ஒரு செயல்திட்டத்தை வகுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பன்டி சஞ்சய் குமார் பேச்சுக்கு அந்த கூட்டத்தில் பலத்த வரவேற்பு இருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.