ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை கொண்டாடிய தெலங்கானா பஜ்ரங் தளம்….

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை கொண்டாடிய தெலங்கானா பஜ்ரங் தளம்….

ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் பிரதமர் நரேந்திரா மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் நேற்று தெலங்கானாவில் பஜ்ரங் தளம் அமைப்பினர் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதை கொண்டாடினர். இது தொடர்பாக பஜ்ரங் தளம் இணை அமைப்பாளர் சுபாஸ் சந்தர் கூறியதாவது:

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை கொண்டாடிய தெலங்கானா பஜ்ரங் தளம்….

492 ஆண்டுகளுக்கு முன் 1528ம் ஆண்டில் பாபரின் ராணுவம் அயோத்தியை தாக்கியது, ராமர் கோயிலை இடித்து அந்த இடத்தில் மசூதியை கட்டியது. அதன்பிறகு இந்து சமூகம் 76 யுத்தங்களை நடத்தியது. இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு சென்று இறுதியாக இந்துக்களுக்கு ராம ஜென்மபூமி வந்துள்ளது. விஷ்வ இந்து பரிஷத் பஜ்ரங் தளம் இன்று (நேற்று) நாடு முழுவதும் தீபாவளி விழாவாக கொண்டாட முடிவு செய்தது.

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை கொண்டாடிய தெலங்கானா பஜ்ரங் தளம்….

இந்த விழா காலை 7 மணிக்கு யஜ்னா நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இரவு 7 மணிக்கு விளக்குகளில் தீபம் ஏற்றுவதுடன் முடிவடையும். பட்டாசுகள் வெடிக்கப்படும் மற்றும் அலுவலகத்தில் இனிப்புகள் விநியோகப்படும். இந்த அற்புதமான கோயிலின் கட்டுமான பணிகள் எந்தவித தடைகளும் இல்லாமல் விரைவாக நிறைவடைய நாங்கள் பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.