darbar
  • January
    21
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

telangana


Fire

தெலங்கானாவில் லஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த விவசாயி! 

தெலங்கானாவில் லஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியர் விஜயா ரெட்டி ஒரு விவசாயிகள் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 நடிகர் நாகர்ஜூனா

'பண்ணை வீட்டில் அழுகிய சடலம்': விசாரணை வளையத்தில் சிக்கிய பிரபல நடிகை குடும்பம்!

நேற்று இந்த வீட்டை பணியாளர்கள் சுத்தம் வந்துள்ளனர். அப்போது வீட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது


 சம்பத்

கையில் காசும் இல்லை; ஆம்புலன்ஸும் இல்லை; 7 வயது மகளின் சடலத்தை வைத்து கொண்டு கதறிய தந்தை!

கையில் பணமில்லாததால் சொந்த ஊருக்கு தனது மகளின் சடலத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித்தர வேண்டும்


தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக நியமனம்...... தலைவர்கள் வாழ்த்து

தெலங்கான மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


முகமது ஷமீர்

' என்னை ஆடு மேய்க்க விட்டுட்டாங்க, தயவு செஞ்சி காப்பாத்துங்க': சவுதியில் கதறும் இளைஞர்; வைரல் வீடியோ!

தன்னைக் காப்பாற்றும்படி சவுதி அரேபியாவிலிருந்து தெலங்கானா வாலிபர் கதறும் வீடியோ காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் நோயாளியை பாலியல் சித்ரவதை செய்த டாக்டர் கைது?!..

ஹைதராபாத்: மருத்துவ ஆலோசனை கேட்க சென்ற பெண்ணை பாலியல் சித்ரவதை செய்த 65 வயது டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் கோஷ்கா சந்திர மோகன் (65), சில்கல்குடா பகுதி ஸ்ரீ ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருபவர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த மூன்று மாதங்களாக சரும வியாதி இருந்துள்ளது. வியாதிக்கான மருந்தை வழங்கிவிட்டு மீண்டும் பரிசோதனைக்கு வரும்படி கூறியிருக்கிறார் டாக்டர் கோஷ்கா. புதன் கிழமை அன்று பரிசோதனைக்காக டாக்டரை சந்திக்க சென்றிருக்கிறார் அந்த பெண்மணி.

dvv

பரிசோதனை அறைக்கு வரும்படி டாக்டர் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அந்த பெண்மணியும் பரிசோதனை அறைக்கு சென்றுள்ளார். நாடி மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றை சோதனை செய்துவிட்டு, சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என நோட்டமிட்டிருக்கிறார் டாக்டர் கோஷ்கா. யாரும் இல்லை என்பதை அறிந்த பின்பு, அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி, கிளினிக்கை விட்டு ஓடிவிட்டார்.

DDVdv

அதன்பிறகு தன் கணவரிடம் நடந்த விஷயத்தை கூறி, சில்கல்குடா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். டாக்டரை பத்மராவ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ள போலீஸார், இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

Arunpandiyan Thu, 05/02/2019 - 18:18
sexual assault sexual harrasement telangana Hyderabad doctor arrested பாலியல் சித்ரவதை க்ரைம்

English Title

Telangana doctor arrested after sexually assaulting his patient?!

News Order

0

Ticker

0 தெலங்கானாவின் கொடூர கிணறு; தோண்ட தோண்ட வரும் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண்களின் எலும்புகள்!

ஹைதராபாத்: பள்ளி மாணவிகள், சிறுமிகள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பாழடைந்த கிணற்றில் வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹாஜிபூர் கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு சிறுமி கடந்த 25-ம் தேதி பள்ளியில் இருந்து திரும்பும் போது மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கைவிடப்பட்ட பாழுங்கிணறு ஒன்றின் அருகே சிறுமியின் கைப்பை கிடப்பதை கண்டறிந்துள்ளனர்.

rape

இதையடுத்து கிணற்றில் இறங்கி சோதனை மேற்கொண்ட போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தடயங்களை தேடி அதற்கு அடுத்த நாள் கிணற்றினுள் இறங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு, 18 வயதான மற்றொரு இளம்பெண்ணின் சடலத்தை கண்டறிந்து அதனை போலீசார் மீட்டனர்.

srinivasa reddy

அந்த பெண்ணும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தாக தெரிய வந்ததையடுத்து, கிணற்றின் உரிமையாளரும், லிஃப்ட் மெக்கானிக்கான ஸ்ரீனிவாஸ் (27) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவிக்கவே, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். அப்போது, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களை லிஃப்ட் தருவதாக கூறி அழைத்துச்சென்று இத்தகைய செயலில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த தகவல் தீயாக பரவ, கடந்த 2015-ஆம் ஆண்டில் காணாமல் போன 11 வயது சிறுமியின் பெற்றோர், தங்களது மகள் மாயமானது குறித்து போலீசாரை அணுகியுள்ளனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஸ்ரீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அச்சிறுமியின் உடலை அதே பகுதியில் உள்ள வேரு ஒரு கைவிடப்பட்ட பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர்.

telangana rape

அதேசமயம், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஸ்ரீனிவாசனின் வீட்டை தீயிட்டு கொளுத்தி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்று தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தில் தொடரும் பதற்றம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே, ஸ்ரீனிவாசனிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அண்டை மாநிலமான ஆந்திராவின் கர்னூல் நகரத்தை சேர்ந்த பெண் ஒருவரை, கடந்த 2016-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து, அந்த பெண்ணின் சடலத்தை, தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி எறிந்ததாக மற்றொருமொரு அதிர்சிகர தகவல் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

smprabu Tue, 04/30/2019 - 18:54
telangana Murder Sexual Abuse well rape hajipur சடலத்தை மீட்கும் போலீசார் க்ரைம்

English Title

Telangana's well of horrors: Police search for clues on 3rd girl, missing since 2015

News Order

0

Ticker

0 மாணவர்கள் நலனுக்காக 70,000 ரூபாய் செலவழித்த அரசு பள்ளி ஆசிரியர்?!..

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முன் மாதிரியாக செயல்படுகிறார் தெலங்கானா மாநிலம் அடவிதேவுலப்பல்லியை சேர்ந்த துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சதிஷ் (30).  தலைமை ஆசிரியர் சதிஷ், கிராமத்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். அதற்கு அவரின் கடின உழைப்பும், அவர் வகுத்த திட்டங்களுமே காரணம். 21 மாணவர்கள் மட்டுமே இருந்த பள்ளியில், இவரது நடவடிக்கையால் தற்போது 63 மாணவர்கள் பயில்கின்றனர்.

j

சதிஷ் வகுத்த திட்டங்களில் முக்கியமானது, தான் பள்ளிக்கு சரியான நேரத்தில் வந்து போகாமல் இருந்தால் தன்னிடம் 1,300 ரூபாய் அபராதத்தை பெறும் உரிமையை அந்த கிராம மக்களுக்கு வழங்கியிருக்கிறார். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் ராம ராவ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்க எங்கள் பிள்ளைகள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த சதிஷ், அரசாங்க ஆசிரியர்கள் மீது மக்களுக்கு எப்போதும் அவநம்பிக்கை இருக்கிறது. ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளி வருவதில்லை, பாடம் நடத்துவதில்லை என்கின்றனர். அரசு ஆசிரியர்கள் மீது நன்மதிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி என்கிறார்.

sdvz

இதுமட்டுமல்லாது மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கிடைக்க தன் சொந்த பணம் 70,000 ரூபாயை செலவு செய்துள்ளார். குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்ய அரசாங்கம் அளிப்பதாக சொன்ன பணத்தை தராததால் தன் கைக்காசை போட்டு அதனை செயல்படுத்தியிருக்கிறார். இரண்டு முறை பணி இடமாற்றத்துக்கான வாய்ப்பு கிடைத்தும், இந்த கிராம மக்களை நேசிப்பதால் இந்த பள்ளியிலேயே பணிபுரிந்து வருகிறார்.

Arunpandiyan Sat, 04/27/2019 - 18:40
telangana govt teacher education students தலைமை ஆசிரியர் சதிஷ் இந்தியா

English Title

Telangana govt school headmaster spends 70,000 rs for students health?!..

News Order

1

Ticker

0 அரசின் அக்கறையின்மை; தெலங்கானாவில் அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 உள்ளிட்ட பொதுத்தேர்வு முடிவுகள் வரும் போதும், குறைவான மதிப்பெண் அல்லது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

students

பெற்றோர், அக்கம் பக்கத்தாரின் ஏளன பேச்சுக்கு ஆளாவதால் மனசோர்வு அடையும் மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை சற்றும் யோசிக்காமல் எடுத்து விடுகின்றனர். வாழ்க்கையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணியாக கல்வி இருக்குமே தவிர, கல்வி மற்றும் மதிப்பெண்கள் மட்டுமே எவரது எதிர்காலத்தையும் நிர்ணயிப்பதில்லை. இதனை அறியாமல் ஏராளமான மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்து கொள்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும்.

இதைதவிர்க்க மாணவர்கள், பெற்றோர்கள் தயக்கமில்லாமல் அரசின் இலவச சேவையை அழைக்கலாம். உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள் என 24 மணி நேரமும் ஆலோசனை வழங்க காத்திருக்கின்றனர். பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் பங்கு இதில் முக்கியம் என்பதால் மதிப்பெண்களை நோக்கி குழந்தைகளை அவர்கள் நகர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

students

ஆனால், தெலங்கானா மாநிலத்தில் வெளியாகியுள்ள பிளஸ்1, பிளஸ்2 உள்ளிட்ட இடைநிலை தேர்வு முடிவுகள் அதிர்சியடைய செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதுவரை அம்மாநிலத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை ஊருப்பினரின் உறவினர் ஒருவரும் அடங்குவார்.

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவதால், ஹுசைன் சாகர் ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு முடிவுகள் வந்த நாளில் இருந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் மாணவர்களை மீட்டு, அவர்களது பெற்றோருக்கு முதலில் ஆலோசனைகளை வழங்கி, அடுத்து மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய பின்னர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைப்போம் என காவல் ஆய்வாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

students

அதேசமயம், மாணவர்களின் உயிரிழப்புகள் சிதைந்து போன கல்வி அமைப்பிற்கு எடுத்துக்காட்டு எனவும், தேர்வுகளில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் கடுமையான அழுத்தத்தை மாணவர்கள் சந்திப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் இடையே நிலவும் போட்டி காரணமாக மாணவர்கள் சுமார் 16 முதல் 18 மணி நேரம் படிப்பதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால், அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டில் தெலங்கானா வித்யார்த்தி வேதிகா எனும் அமைப்பு ஸ்ரீ சைதன்யா மற்றும் நாராயணா பள்ளிகளை தடை செய்ய வேண்டும் என கையெழுத்திடும் மனுவை Change.org-ல் ஆன்லைன் மூலமாக மேற்கொண்டது. தேர்வு முடிவுகளுக்கு பின்னரும் கையெழுத்திடப்பட்டு வந்த அந்த மனுவில் சுமார் 1,30,000 பேர் கையெழுத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

students

கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கை போலீசார், சட்டப்பிரிவு 174-ன் கீழ் மட்டுமே பதிவு செய்கின்றனர். பெற்றோர்களும் புகார் அளிக்க முன்வராததால் கல்வி நிறுவனங்களுக்கு அது சாதகமாக முடிந்து விடுகிறது எனவும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதையெல்லாம் கருத்தில் கொண்டு இதுவரை அக்கறை இல்லாமல் இருக்கும் அரசு, இதற்கு மேலும் அப்படி இருக்காமல் தகுந்த நடவடிக்கை எடுக்கக் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

**தற்கொலை குறித்த எண்ணம் தோன்றும் மாணவர்கள் அதில் இருந்து விடுபட ஆலோசனைக்கு உதவி மையமான ரோஷினியை, 040 66202000/2001 என்ற எண்ணில் நாள்தோறும் காலை 11 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இதையும் வாசிங்க

கார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்!

smprabu Wed, 04/24/2019 - 17:35
students suicide Exams telangana கோப்புப்படம் இந்தியா

English Title

Student suicides in Telangana: Spurred by broken system, sustained by govt apathy

News Order

0

Ticker

0 

பாகிஸ்தான் சிந்தாபாத் பாடல்

இந்திய ராணுவப்படையை கவுரவிக்க பாகிஸ்தான் பாடலை காப்பியடித்த பாஜக எம்.எல்.ஏ!

பாகிஸ்தானின் தேசிய நாள், அன்று பாகிஸ்தான் பாதுகாப்பு படையை கவுரவிக்கும் வகையில் ‘பாகிஸ்தான் சிந்தாபாத்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது
கவிதா

தேர்தலில் போட்டியிடும் முதல்வர் மகள்: இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் வாக்குச்சீட்டு முறை? அதிர்ச்சி ரிப்போர்ட்!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் போட்டியிடும் தொகுதியில் வாக்கு சீட்டு முறை நடைமுறைப்படுத்தவுள்ளது. 


சந்திரபாபு நாயுடு

தொடர் பின்னடைவு; தெலங்கானாவில் தெலுங்கு தேசம் போட்டியில்லை!

கடும் அதிருப்தியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்


telangana

தேர்தலில் தோற்றதால் கொடுத்த பணத்தை வாக்காளரிடம் திருப்பி கேட்ட வேட்பாளர்

தேர்தல் என்றாலே வேட்பாளர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் பணம் பெறுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது


2018 TopTamilNews. All rights reserved.