இந்துக்களை எதிர்த்தால் அரசியலில் இருக்க முடியாது என்பதை கெஜ்ரிவால் உணர்ந்துள்ளார்…. தேஜஸ்வி சூர்யா

இந்துக்களை எதிர்த்தால் அரசியலில் இருக்க முடியாது என்பதை கெஜ்ரிவால் உணர்ந்துள்ளார்…. தேஜஸ்வி சூர்யா

தீபாவளி பூஜையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்ததையடுத்து, இந்துக்களை எதிர்ப்பதன் மூலம் தன்னால் அரசியலில் இருக்க முடியாது என்பதை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ந்துள்ளார் என்று தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.

தெற்கு பெங்களூரு மக்களவை பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா தலைநகர் டெல்லியில் ஆதர்ஷ் நகரில் உள்ள ஒரு காலனியில் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்து அகதிகளுடன் தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் சட்டமாக மாறிய பிறகு அகதிகளின் வாழ்க்கை மாறி விட்டது. அவர்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு மற்றும் மரியாதை இல்லை. அவர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு, அவர்கள் பாதுகாப்பான சூழல் கிடைத்தது.

இந்துக்களை எதிர்த்தால் அரசியலில் இருக்க முடியாது என்பதை கெஜ்ரிவால் உணர்ந்துள்ளார்…. தேஜஸ்வி சூர்யா
தேஜஸ்வி சூா்யா

அன்னா ஹசாரோ அன்டோலனின் மேடையில் பாரத மாதா படத்தை பயன்படுத்துவதில் வெட்கப்பட்டவர்கள், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது அமைச்சரவையுடன் (அமைச்சர்கள்) தீபாவளி பூஜை செய்ய கோயிலுக்கு செல்கிறார். இந்தியா மாறி விட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற அரசியல்வாதிகள் இந்துக்களை எதிர்ப்பதன் மூலம் தங்களால் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்துள்ளனர். இது அரசியல் யதார்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்துக்களை எதிர்த்தால் அரசியலில் இருக்க முடியாது என்பதை கெஜ்ரிவால் உணர்ந்துள்ளார்…. தேஜஸ்வி சூர்யா
கோயில் சாமி தரிசனம் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்

தேஜஸ்வி சூர்யா தனது டிவிட்டரில், டெல்லியின் ஆதர்ஷ் நகரில் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்து அகதிகளுடன் பி.ஜே.ஒய்.எம். தீபாவளி கொண்டாடியது. உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே நிலம். துன்புறுத்தப்பட்ட இந்துக்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி கூறுகிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி என்று பதிவு செய்து இருந்தார்.