ஒரு மாசத்துல குற்றங்களை கட்டுப்படுத்துங்க.. இல்லைன்னா ஜனாதிபதியிடம் புகார் கொடுப்போம்.. தேஜஸ்வி யாதவ்

 

ஒரு மாசத்துல குற்றங்களை கட்டுப்படுத்துங்க.. இல்லைன்னா ஜனாதிபதியிடம் புகார் கொடுப்போம்.. தேஜஸ்வி யாதவ்

பீகாரில் ஒரு மாதத்துக்குள் குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் தவறினால் டெல்லி சென்று குடியரசு தலைவரிடம் புகார் கொடுப்போம் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரை தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை செய்துள்ளார்.

பீகாரில் பாட்னாவை சேர்ந்த இண்டிகோ விமான நிறுவனத்தின் மேலாளர் ரூபேஷ் கே சிங் அண்மையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். முதல்வர் நிதிஷ் குமாரின் இல்லத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த கொலை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு நிதிஷ் குமார் அரசை ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தற்போது, மாநிலத்தில் ஒரு மாதத்துக்குள் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வரவில்லையென்றால் டெல்லி சென்று குடியரசு தலைவரிடம் புகார் கொடுப்போம் என்று நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு மாசத்துல குற்றங்களை கட்டுப்படுத்துங்க.. இல்லைன்னா ஜனாதிபதியிடம் புகார் கொடுப்போம்.. தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: முதல்வர் நிதிஷ் குமார் உதவியற்றவர், பலவீனமானவர் மற்றும் சோர்வடைந்த முதல்வர். குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாட்டின் குற்றங்களின் தலைநகரமாக பீகார் உருவாகி வருகிறது. பீகாரில் ஆட்சியின் இருக்கும் அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது. மாநிலத்தில் குற்றங்கள் அதிகரித்து வருவது பத்திரிகையாளர்கள் கேட்கும்போது அவர்களை முதல்வர் மிரட்டுகிறார்.

ஒரு மாசத்துல குற்றங்களை கட்டுப்படுத்துங்க.. இல்லைன்னா ஜனாதிபதியிடம் புகார் கொடுப்போம்.. தேஜஸ்வி யாதவ்
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்

பீகார் அரசு ஒரு மாதத்துக்குள் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர தவறினால், மெகா கூட்டணியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்று, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து மாநில அரசு குறித்து புகார் கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று தேஜஸ்வி யாதவ் பேஸ்புக் லைவ்வில், இண்டிகோ பணியாளர் கொலையில் பீகார் அமைச்சர்களுக்கு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று வதந்திகள் பரவி வருவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.