எதிரிகளை எதிர்த்து போராடுவது எளிது… முதுகில் குத்தும் நபர்களை கையாள்வது கடினம்…. தேஜஸ்வி யாதவ்

 

எதிரிகளை எதிர்த்து போராடுவது எளிது… முதுகில் குத்தும் நபர்களை கையாள்வது கடினம்…. தேஜஸ்வி யாதவ்

எதிரிகளை எதிர்த்து போராடுவது எளிது ஆனால் முதுகில் குத்தும் நபா்களை கையாள்வது கடினம் என்று கடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்பை கெடுத்த கட்சிக்குள் இருக்கும் நபர்கள் குறித்து தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை (125) கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. இருப்பினும் அந்த தேர்தலில் அதிக இடங்களை (75) வென்ற தனிப்பெரும் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் விளங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று பெரும்பாலான நிறுவனங்கள் கணித்து இருந்தன. ஆனால் மெகா கூட்டணி மொத்தம் 109 இடங்களில் மட்டுமே வென்றது.

எதிரிகளை எதிர்த்து போராடுவது எளிது… முதுகில் குத்தும் நபர்களை கையாள்வது கடினம்…. தேஜஸ்வி யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

இந்த சூழ்நிலையில் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாட்டாளர்கள் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் தேஜஸ்வி யாதவ் பேசுகையில் கூறியதாவது: கட்சியை புதுப்பிக்கும்படியும், கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகளை கெடுத்த அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் கூறினார். மேலும் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

எதிரிகளை எதிர்த்து போராடுவது எளிது… முதுகில் குத்தும் நபர்களை கையாள்வது கடினம்…. தேஜஸ்வி யாதவ்
தேர்தல்

எதிரிகளை எதிர்த்து போராடுவது எளிது. ஆனால் வேண்டும் என்றே கட்சியை சேதப்படுத்தும் முதுகில் குத்தும் நபர்களை கையாள்வது கடினம். எல்லோரும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்கள். கடந்த முறை எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. ஆனால் கட்சி தலைவர்கள் நாசவேலை செய்வதிலிருந்து விலக வேண்டும். கட்சிக்கு எதிராக செயல்படும் எவரும் நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள். பீகார் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை எதிர்க்கொள்ளக்கூடும். 2021ம் ஆண்டிலேயே கூட இருக்கலாம். ஆகையால் தொண்டர்கள் மக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.