வாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு…. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை… தேஜஸ்வி யாதவ் தகவல்

வாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு…. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை… தேஜஸ்வி யாதவ் தகவல்

வாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தேன் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பீகாரில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 28ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கோவிட்-19 காரணமாக அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் மக்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனர்.

வாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு…. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை… தேஜஸ்வி யாதவ் தகவல்
தேஜஸ்வி யாதவ்

மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு மக்கள் அதிகளவில் வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: நான் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டேன், வாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீட்டை கேட்டேன்.

வாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு…. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை… தேஜஸ்வி யாதவ் தகவல்
இந்திய தேர்தல் ஆணையம்

கோவிட்-19 நிலவரம் கட்டுக்குள் வரவில்லையென்றால் தேர்தலை ஒத்திவைக்கலாம் என்று முன்பே தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டோம். நாங்கள் அவசரப்படவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முடிவு செய்தது, நாங்கள் அதனை பின்பற்றுகிறோம். கூட்டங்களுக்கு மக்கள் வருவதை எங்களால் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.