நாட்டின் பிரதமர் என்பதால் எதையும் மோடியால் பேச முடியும்… தேஜஸ்வி யாதவ் பதில்

 

நாட்டின் பிரதமர் என்பதால் எதையும் மோடியால் பேச முடியும்…  தேஜஸ்வி யாதவ் பதில்

பிரதமர் மோடி தன்னை காட்டாட்சி இளவரசர் என்று கூறியது குறித்து பதிலளிக்கையில், நாட்டின் பிரதமர் என்பதால் அவரால் எதுவும் பேச முடியும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பீகாரில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை காட்டாச்சியின் யுவராஜ் (இளவரசர்) என்று குறிப்பிட்டார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்திக்கு அரசியல் அந்தஸ்து இல்லை. அவர் ஒவ்வொரு நாளும் அபத்தமான ஒன்றை பேசுகிறார் என தெரிவித்து இருந்தார்.

நாட்டின் பிரதமர் என்பதால் எதையும் மோடியால் பேச முடியும்…  தேஜஸ்வி யாதவ் பதில்
பிரதமர் மோடி

மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் கருத்து குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், அவர் (மோடி) நாட்டின் பிரதமர், அவர் எதையும் பேச முடியும் இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அவர் பீகார் வந்தால், மாநிலத்துக்கான சிறப்பு தொகுப்பு, வேலையின்மை, பசி ஆகியவை குறித்து பேசியிருக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் குறித்து அவர் பேசுவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டின் பிரதமர் என்பதால் எதையும் மோடியால் பேச முடியும்…  தேஜஸ்வி யாதவ் பதில்
ராகுல் காந்தி

பா.ஜ.க. தலைவர்கள் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவதை விட வேலையின்மை, ஊழல் போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும். எங்களுக்கு கிடைத்த பொதுவான தகவல்படி, முதல்கட்ட தேர்தல் நடந்த அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் கணித்துள்ளோம். அனைத்து சாதி, வர்க்கம் மற்றும் மத மக்களும், வேலையின்மை மற்றும் ஊழல் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர் என தெரிவித்தார்.