நிதிஷ்ஜி எனக்கு எதிராக பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளும் ஆசிர்வாதம் போன்றது.. தேஜஸ்வி யாதவ்

நிதிஷ்ஜி எனக்கு எதிராக பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளும் ஆசிர்வாதம் போன்றது.. தேஜஸ்வி யாதவ்

நிதிஷ் குமார் எனக்கு எதிராக பயன்படுத்தும் மோசமான வார்த்தைகளும் ஆசிர்வாதம் போன்றது என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பீகாரில் குற்றங்கள் குறைந்ததுள்ளது. குற்றங்கள் தொடர்பான தரவரிசையில் பீகார் 23வது இடத்தில் உள்ளது. சில மக்கள் தங்களை சுய விளம்பரம் செய்து கொள்வதில்தான் ஆர்வமாக உள்ளனர், பணிகளில் அல்ல என்று தேஜஸ்வி யாதவை மறைமுகமாக சாடினார். இதற்கு தேஜஸ்வி யாதவ் நேற்று டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

நிதிஷ்ஜி எனக்கு எதிராக பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளும் ஆசிர்வாதம் போன்றது.. தேஜஸ்வி யாதவ்
முதல்வர் நிதிஷ் குமார்

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் டிவிட்டரில், நிதிஷ்ஜி எனக்கு எதிராக பயன்படுத்தும் மோசமான வார்த்தைகளும் எனக்கு ஆசிர்வாதம் போன்றது. நிதிஷ்ஜி மன மற்றும் உடல்ரீதியாக சோர்ந்து விட்டார் அதனால் அவர் என்ன விரும்புகிறரோ அதை பேசலாம். அந்த வார்த்தைகளை நான் ஆசிர்வாதமாக எடுத்துக் கொள்வேன்.

நிதிஷ்ஜி எனக்கு எதிராக பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளும் ஆசிர்வாதம் போன்றது.. தேஜஸ்வி யாதவ்
தேர்தல்

இந்த முறை வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய விஷயங்கள்தான் பீகார் வாக்களிக்க தீர்மானிக்கும் என பதிவு செய்து இருந்தார். பீகாரில் இன்று சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளில் நடைபெறுகிறது. அடுத்த கட்ட தேர்தல்கள் முறையே நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது.