உலகிலேயே பெரிய கட்சிதான்… ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை… பா.ஜ.க.வை கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ்

உலகிலேயே பெரிய கட்சிதான்… ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை… பா.ஜ.க.வை கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ்

உலகிலேயே பெரிய கட்சிதான் ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று பா.ஜ.க.வை தேஜஸ்வி யாதவ் கிண்டல் அடித்துள்ளார்.

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணிக்கும், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் கூட்டங்களில் நிதிஷ் குமாரையும், பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

உலகிலேயே பெரிய கட்சிதான்… ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை… பா.ஜ.க.வை கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய கட்சி பா.ஜ.க.. ஆனால் அவர்களிடம் எந்தவொரு முதல்வர் வேட்பாளர் இல்லை. அவர்கள் இன்னும் ஊன்றுகோலாகவே இருக்கின்றனர். அவர்கள் எனக்கு எதிராக முழு படைகளையும் பயன்படுத்தினர், நான் தனியாக இருக்கிறேன். அவர்கள் என்னை அனுபவமற்றவர்கள் என்று அழைக்கிறார்கள்.

உலகிலேயே பெரிய கட்சிதான்… ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை… பா.ஜ.க.வை கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ்
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்

ஆனால் நான் ஒரு எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணை முதல்வராக பதவியில் இருந்துள்ளேன். எனது 5 ஆண்டு கால அனுபவம் 50 வருட அனுபவத்துக்கு சமம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் தேஜஸ்வி யாதவ், ஆட்சிக்காக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் சமரசம் செய்து கொள்ளாத ஒரே பிராந்திய கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம்தான் என்று தேஜஸ்வி யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.