முதல் அமைச்சரவை கூட்டத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க ஒப்புதல்… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

முதல் அமைச்சரவை கூட்டத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க ஒப்புதல்… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் முதல் அமைச்சரவை கூட்டத்தில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர வேலை வழங்க மகா கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்கும் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பீகாரில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இம்மாதம் 28ம் தேதி முதல் மொத்தம் 3ம் கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. லாலு பிரசாத் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைமையில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணி மகா கூட்டணி என அழைக்கப்படுகிறது.

முதல் அமைச்சரவை கூட்டத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க ஒப்புதல்… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
தேஜஸ்வி யாதவ்

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று ராகோபூர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக தனது தாய் ரப்ரி தேவி மற்றும் மூத்த சகோதரர் தேஜ் பிரதான் யாதவ் ஆகியோரிடம் ஆசி பெற்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இன்று (நேற்று) ராகோபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். ராகோபூர் மக்கள் எப்போதும் எங்களை ஆதரவளிப்பார்கள், மீண்டும் ஒரு முறை மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.

முதல் அமைச்சரவை கூட்டத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க ஒப்புதல்… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
ரப்ரி தேவி

நாங்கள் ஆட்சி அமைத்தால், முதல் அமைச்சரவை கூட்டத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்க ஒப்புதல் அளிப்போம். அது அரசு வேலையாகவும், நிரந்தரமாகவும் இருக்கும். எங்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான ஒரே மாதிரியான வேலைக்கு ஒரே மாதிரியான சம்பளம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.