சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மோடி அரசு விரும்பவில்லை.. தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மோடி அரசு விரும்பவில்லை.. தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மோடி தலைமையிலான மத்திய அரசு விரும்பவில்லை என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார்.

பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில், சட்டப்பேரவையில் சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பேசிய வீடியோ கிளிப்பை பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில் தேஜஸ்வி யாதவ் பேசியிருப்பதாவது: நாம் பீகார் சட்டப்பேரவையில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி இரு முறை ஒரு மனதாக முன்மொழிவை நிறைவேற்றினோம்.

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மோடி அரசு விரும்பவில்லை.. தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
தேஜஸ்வி யாதவ்

அதனை மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால் சாதி கணக்கீடு/மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு விரும்பவில்லை? மக்கள் தொகையில் 70 சதவீதம் உள்ள பின்தங்கிய/ மிகவும் தங்கிய மக்களின் உரிமையை மத்திய அரசு ஏன் பறிக்க விரும்புகிறது? பா.ஜ.க. 70 சதவீத மக்களை இந்துக்களாக கருதவில்லையா?. இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மோடி அரசு விரும்பவில்லை.. தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
நிதிஷ் குமார்

கடந்த சனிக்கிழமையன்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், 2019 பிப்ரவரி மற்றும் 2020ம் ஆண்டில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை பற்றிய எங்கள் எண்ணங்களை நாங்கள் ஏற்கனவே மத்திய அரசிடம் வைத்திருக்கிறோம். சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரு முறையாவது செய்யப்படவேண்டும். இதன் மூலம் அவர்கள் திட்டங்களிலிருந்து நன்மைகளை பெற முடியும். சரியான எண்ணிக்கை தெரிந்தால், அவர்களின் முன்னேற்றத்துக்கா நாங்கள் பணியாற்ற முடியும் என்று தெரிவித்து இருந்தார்.