சொன்ன மாதிரி முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க… பா.ஜ.க. கூட்டணியை எச்சரித்த தேஜஸ்வி

 

சொன்ன மாதிரி முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க… பா.ஜ.க. கூட்டணியை எச்சரித்த தேஜஸ்வி

பீகாரில், தேர்தலில் வாக்குறுதி அளித்தப்படி, பதவியேற்ற முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க. இல்லையென்றால் போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைவோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை செய்துள்ளார்.

பீகாரில் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நேற்று பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி யாதவும் நேற்று பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நாட்டின் வேலையின்மையின் தலைநகரமாக பீகார் மாறியுள்ளது.

சொன்ன மாதிரி முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க… பா.ஜ.க. கூட்டணியை எச்சரித்த தேஜஸ்வி
தேஜஸ்வி யாதவ்

பொதுமக்கள் இனி காத்திருக்கமுடியாது. முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு அவர்களால் (தேசிய ஜனநாயக கூட்டணி அரசு) வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை என்றால், மாநிலம் முழுவதும் போராட்டங்களில் பொதுமக்களுடன் நாங்கள் இணைவோம். 1.56 கோடி வாக்காளர்கள் வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, நீர்பாசனம் போன்ற எங்களது பிரச்சினைகளை நம்பினார்கள். நாங்கள் அவர்களின் நம்பிக்கை தகர்க்க விடமாட்டோம். கடுமையான போராட்டம் தொடரும். இந்த முறை மாற்றத்துக்காக மக்கள் வாக்களித்து, தங்களது தீர்ப்பை வழங்கினார்கள். ஆயினும் கூட, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சொன்ன மாதிரி முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க… பா.ஜ.க. கூட்டணியை எச்சரித்த தேஜஸ்வி
நிதிஷ் குமார்

சட்டப்பேரவையில் 3வது பெரிய கட்சியின் தலைவர் முதல்வரானது முதல் முறையாக கேட்கப்படுகிறது. நிதிஷ்குமார் ஊழலின் பீஷ்மபிதமா. இந்த முறையும் அவர் திருடன் வாசலில் இருந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கினார். நான் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பே என் ராஜினாமாவை அவர்கள் கோரினார்கள். நான் துணை முதல்வராக இருந்த போது என் மீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டு இருந்தது என்று நிரூபியுங்கள் என்று நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.