கூட்டணி இல்லையென்றால் நிதிஷ் குமார் கட்சிக்கு இரட்டை இலக்கங்களில் கூட இடங்கள் கிடைக்காது.. தேஜஸ்வி

கூட்டணி இல்லையென்றால் நிதிஷ் குமார் கட்சிக்கு இரட்டை இலக்கங்களில் கூட இடங்கள் கிடைக்காது.. தேஜஸ்வி

கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் முதல்வ நிதிஷ் குமார் கட்சிக்கு இரட்டை இலக்கங்களில் கூட இடங்கள் கிடைக்காது என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் ஆட்சி காலம் வரும் நவம்பரில் முடிவடைய உள்ளது. அதனால் அம்மாநிலத்தில் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் அக்டோபா-நவம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க., லோக் ஜன்சக்தி ஆகியவை ஒரு கூட்டணியாகும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இணைந்து பெரிய கூட்டணி அமைத்து ஒரு கூட்டணியாகும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி இல்லையென்றால் நிதிஷ் குமார் கட்சிக்கு இரட்டை இலக்கங்களில் கூட இடங்கள் கிடைக்காது.. தேஜஸ்வி
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இந்த சூழ்நிலையில், நிதிஷ் குமார் கட்சி கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டால் இரட்டை இலக்கங்களில் கூட இடங்களை வெல்ல முடியாது என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் டிவிட்டரில், 1995ல் ஒருங்கிணைந்த பீகார் (இப்போது பீகார் மற்றும் ஜார்க்கண்ட்) சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் போராடி 7 இடங்களை பெற்றார்.

கூட்டணி இல்லையென்றால் நிதிஷ் குமார் கட்சிக்கு இரட்டை இலக்கங்களில் கூட இடங்கள் கிடைக்காது.. தேஜஸ்வி
பா.ஜ.க., காங்கிரஸ்

2014ல் அவர் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்து 2 இடங்களை பெற்றார். அவரது வாழ்நாளில் எப்போதாவது அவர் தனியாக போட்டியிட்டால், புகழ்பெற்ற முகத்துக்கு இரட்டை இலக்கங்களில் கூட இடங்கள் கிடைக்காது. இது எனது சவால் மற்றும் கூற்று என பதிவு செய்து இருந்தார். பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் அல்லது ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்காவிட்டால் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இரட்டை இலக்கங்களில் கூட வெற்றி பெறாது என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.