ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி… களைகட்டிய பீகார் தேர்தல்

 

ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி… களைகட்டிய பீகார் தேர்தல்

ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் ஆட்சி காலம் வரும் நவம்பர் இறுதியில் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மொத்தம் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. பீகாரில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் நேற்று முன்தினம் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி… களைகட்டிய பீகார் தேர்தல்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இந்நிலையில் நேற்று ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவரும், அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று வேலையின்மை தொடர்பான வலைதளத்தை தொடங்கினோம், மேலும் வேலையின்மைக்காக இலவச தொலைப்பேசி அழைப்பு மற்றும் மிஸ்டு கால் வசதியையும் ஏற்படுத்தினோம். அந்த வலைதளத்தில் வேலையில்லாத இளைஞர்கள் 9.47 லட்சம் பேர் தங்களது பயோ டேட்டாக்களை சமர்ப்பித்துள்ளனர். அதேவேளையில் 13.11 லட்சம் பேர் மிஸ்டு கால் வாயிலாக பதிவு செய்துள்ளனர்.

ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி… களைகட்டிய பீகார் தேர்தல்
தேஜஸ்வி யாதவ்

பீகார் இளைஞர்களிடம் நான் இதை சொல்ல விரும்புகிறேன், மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆட்சிக்கு அமைக்கும் வாய்ப்பு கொடுத்தால், தனது முதல் அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பதை இது வெறும் வாக்குறுதி அல்ல. இவை நிரந்த அரசு வேலைகளாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைகள் வழங்கப்படும் என்ற உறுதிமொழியுடன் அதிகாரத்தை அடைந்து, 15 ஆண்டு ஆட்சிக்கு பிறகு பீகாரை திவாலாக விட்டவர்களை போல நாங்கள் இல்லை. இவ்வாறு அவர் தெரிவி்த்தார்.