மக்களின் உயிர்களை விட உங்க இமேஜ் முக்கியமா?… முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேள்வி கேட்கும் தேஜஸ்வி யாதவ்

மக்களின் உயிர்களை விட உங்க இமேஜ் முக்கியமா?… முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேள்வி கேட்கும் தேஜஸ்வி யாதவ்

பீகாரில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளதுடன், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மாநில மக்களின் உயிரை காட்டிலும் தனது இமேஜை பராமரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார் என முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக தாக்கியுள்ளார்.

மக்களின் உயிர்களை விட உங்க இமேஜ் முக்கியமா?… முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேள்வி கேட்கும் தேஜஸ்வி யாதவ்

ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இது தொடர்பாக கூறியதாவது: நிதிஷ் ஜி 12.6 கோடி பீகாரிகளின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார். மோசமான அழுத்தங்களை தவிர்க்க தரவுகளை அமுக்கிறார். நம் மக்களின் உயிர்களை காட்டிலும் உங்களது இமேஜ் முக்கியமானதா. பரிசோதனை எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்கவில்லை என்றால் சூழ்நிலை கையை விட்டு போய் விடும்.

மக்களின் உயிர்களை விட உங்க இமேஜ் முக்கியமா?… முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேள்வி கேட்கும் தேஜஸ்வி யாதவ்

தற்போதைய அளவில் பரிசோதனை தொடர்ந்து மேற்கொண்டால் லட்சக்கணக்கான மக்கள் உயிர்இழப்பு போன்ற மோசமான சூழ்நிலை ஏற்படும். முதலமைச்சர் உண்மையான புள்ளிவிவரங்களை மறைத்து, பாதியை மற்றொரு நாளில் வெளியிட்டார். பரிசோதனைகள் 30 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், அதிக பாதிப்பு எண்ணிக்கையை அரசு தெரிவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.