சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் விரைவு ரயில் நேரம் மாற்றம்

 

சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் விரைவு ரயில் நேரம் மாற்றம்

வண்டி எண் 02613 சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தற்போது சென்னையிலிருந்து வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.20 மணிக்கு மதுரை வந்து சேருகிறது. இந்த ரயில் காலை 6:00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படுவதால் சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள பயணிகள் இந்த ரயிலை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் விரைவு ரயில் நேரம் மாற்றம்

இதைக் கருத்தில் கொண்டு இந்த ரயில் சென்னையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எனவே 13.10.2020 முதல் வண்டி எண் 02613 சென்னை எழும்பூர் மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.50 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில் திருச்சியில் இருந்து முற்பகல் 10.35 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் இருந்து முற்பகல் 11.55 மணிக்கும் புறப்படும்படி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையில் எந்த மாற்றமும் கிடையாது.