மதுரை- சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்!

 

மதுரை- சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்!

திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமேசுவரம் மற்றும் கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் சேவை அக்டோபா் முதல் வாரத்தில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூா் – மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் (02613) இன்று முதல் காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு பகல் 12.20 மணிக்கு மதுரைக்கு வந்துசேரும்.

மதுரை- சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்!

அதே போல், மதுரை- சென்னை எழும்பூா் தேஜஸ் சிறப்பு ரயில் (02614) இன்று முதல் மாலை 3.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூா் சென்று சேரும். இந்த ரயில்கள் வியாழக்கிழமைகளில் இயங்காது என்றும் திருச்சி, கொடைக்கானல் சாலை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்து உள்ளது.

தேஜாஸ் என்ற தனியார் நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் புதிய தனியார் ரயில் போக்குவரத்துக்குச் சேவையை ஐஆர்சிடிசியுடன் இணைந்து இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடதக்கது. கொரோனா பரவல் ஆரம்பித்த பிறகு கடந்த ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லையில் இருந்தும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது இன்று மீண்டும் ரயில் பயணிகளுக்கான சேவையை தொடங்கி இருக்கிறது.