லாலுவை விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய மகன் தேஜ் பிரதாப்…

 

லாலுவை விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய மகன் தேஜ் பிரதாப்…

மனிதநேய அடிப்படையில் லாலு பிரசாத் யாதவை விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவர் ராம் நாம் கோவிந்த்துக்கு தேஜ் பிரதாப் அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பியுள்ளார்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உடல் நலக் குறைவு காரணமாக, ராஞ்சியில் உள்ள ராஜேந்திர இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறை காவலில் அங்கு லாலு பிரசாத் யாதவ் சிகிச்சை பெற்று வந்தார்.

லாலுவை விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய மகன் தேஜ் பிரதாப்…
லாலு பிரசாத் யாதவ்

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு அவரது உடல் நிலை மோசமானது. இதனையடுத்து லாலுவின் மனைவி, மகன்கள் மற்றும் மூத்த மகள் மிசா பாரதி ஆகியோர் வந்து பார்த்தனர். கடந்த சனிக்கிழமையன்று அவர் விமானத்தில் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு எய்ம்ஸ் மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாலுவை விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய மகன் தேஜ் பிரதாப்…
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்

இந்த சூழ்நிலையில், லாலுவின் மூத்த மகனும், எம்.எல்.ஏ.வுமான தேஜ் பிரதாப், மனிதநேய அடிப்படையில் தனது தந்தை லாலுவை விடுதலைக் செய்யக்கோரி குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்துக்கு ஒரு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். விடுதலை காகிதம் என்று குறிப்பிட்டுள்ள தேஜ் பிரதாப் அந்த அஞ்சல் அட்டையில், தனது தந்தை சமூகத்தின் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் மேசியா என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியில் ஒற்றை வரியில் பல ழைகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.