பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சந்தித்து பேசியது பா.ஜ.க. கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பா.ஜ.க.வின் தேசிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி இடம் பெற்றுள்ளது. இந்த கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி அண்மையில், நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் நற்பெயர் வாங்குகிறார். நாட்டில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களிலும் அவரது (பிரதமர் மோடி) புகைப்படம் அச்சிடப்பட வேண்டும். அதுதான் நியாயமாக இருக்கும் என பதிவு செய்து இருந்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு
பா.ஜ.க.

இந்த பதிவு பீகாரில் பா.ஜ.க.வின் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜிதன் ராம் மாஞ்சி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தது பா.ஜ.க. கூட்டணிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு
லாலு பிரசாத் யாதவ்

தேஜ் பிரதாப் யாதவும், ஜிதன் ராம் மாஞ்சியும் சுமார் அரை மணி நேரம் தனியாக பேசியுள்ளனர். மேலும் ஜிதன் ராம் மாஞ்சி, லாலு பிரசாத் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தேஜ் பிரதாப் யாதவ் அண்மையில், மகா கூட்டணிக்கு யார் திரும்பி வந்தாலும் வரவேற்போம் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தேஜ் பிரதாப் யாதவ், ஜிதன் ராம் மாஞ்சி சந்திப்பு குறித்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் பாதுகாவலர் போன்ற நபர், கூட்டணிக்காக சிறந்ததை செய்வார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.