பற்கள் பிரகாசிக்க வீட்டிலேயே இருக்கு எளிய வழிகள்!

 

பற்கள் பிரகாசிக்க வீட்டிலேயே இருக்கு எளிய வழிகள்!

பற்களை பளிச்சென வெண்மையாக இருப்பது நம்முடைய வெளிப்புற தோற்றத்தைச் சிறப்பாக காட்டக்கூடிய அம்சமாக உள்ளது. பளிச் பற்கள் நம்முடைய வயதை மறைக்கும் விஷயமாக உள்ளது. பற்களை வெள்ளையாக்குவது என்பது ரசாயனங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. இதனால் பற்களின் ஆரோக்கியம் கெடுவதாக பல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பற்கள் பிரகாசிக்க வீட்டிலேயே இருக்கு எளிய வழிகள்!

பற்கள் பளிச்சென இருக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்!

பற்கள் பளிச்சென, சுத்தமாக இருக்க நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் தினமும் இரண்டு வேளை பற்களை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பற்களை தேய்க்க சில வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளைப் பின்பற்றி பல்துலக்க வேண்டும்.

பற்களை அரிக்கும் உணவு, குளிர்பானங்கள் அருந்தினால் முடிந்தவர்கள் உடனடியாக பிரஷ் செய்துவிடுவது நல்லது. முடியாதவர்கள் வாயை கொப்பளிக்க வாவது செய்ய வேண்டும்.

பற்களை நன்கு அழுத்தி தேய்கக் கூடாது. அப்படி செய்வதால் பல்லின் எனாமல் போய்விடும். மென்மையாக அதே நேரத்தில் அழுக்குகள் வெளியேறும் அளவுக்கு அழுத்தம் கொடுத்து செய்ய வேண்டும்.

பற்கள் பளிச்சென இருக்க ஆயில் புல்லிங் செய்யலாம். இது பற்களை பளிச்சென மாற்றுவதுடன் வாயின் ஆரோக்கியத்தையும் காக்கும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வது நல்லது. தேங்காய் எண்ணெய் ஆன்டி பாக்டீரியல் என்பதால் அதில் ஆயில் புல்லிங் செய்யும்போது ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும், பாக்டீரியா அழிக்கப்படும்.

பேக்கிங் சோடா பயன்படுத்தி வீட்டிலேயே பற்களை வெள்ளையாக்கலாம். ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா, இரண்டு டேபிள்ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்து பேஸ்ட் போல தயாரித்து பூசலாம். இது சற்று சிக்கலானது என்பதால் பல் மருத்துவர் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.

ஆப்பிள் சிடார் வினிகரைப் பயன்படுத்தி பற்களை வெள்ளையாக்கலாம். 150 மி.லி தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலக்கி கொப்புளிக்க வேண்டும். பிறகு வெறும் தண்ணீர் விட்டு கொப்புளித்துவிட்டு, பல் துலக்க வேண்டும்.

எலுமிச்சை, ஆரஞ்சு, வாழைத் தோல்கள் கூட பற்களை வெண்மையாக்கும். இந்த பழத் தோல்களை பற்கள் மீது இரண்டு நிமிடங்களுக்கு மென்மையாக தேய்த்து வாய் கொப்புளிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வரும்போது பற்கள் வெண்மையாகும்.