• March
    31
    Tuesday

Main Area

Main



குடித்து விட்டு போலீசாரை கடித்த இளம்பெண்! கதறியழுத தங்கை!

இளம்பெண்
இளம்பெண்

தமிழகமே மது போதையில் தள்ளாடி வருகிறது என்று முன்னணி பத்திரிக்கைகள் எல்லாம் கவர் ஸ்டோரி எழுதி வருகின்றன. அந்தளவுக்கு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி கிடக்கின்றன. சமீப காலங்களில் தமிழகத்தில் பெண்களிடையேவும் மது போதைக்கு அடிமையாகும் விகிதங்கள் அதிகரித்திருப்பது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் விதமாக அச்சுறுத்தி வருகிறது.

drunken

மது போதை எத்தனை கீழ்த்தரமான காரியத்தையும் செய்யும். சுற்றியிருப்பவர்களைப் பற்றி எல்லாம் எதையும் யோசிக்காது என்பதை சமூகத்துக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ஒரு காரியம் சிங்கப்பூரில் நடந்திருக்கிறது. மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிங்கப்பூரில் 6½ மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இத்தனைக்கும் அப்படி போதையில் போலீஸ் அதிகாரியை கடித்தப் பெண் சிங்கப்பூரைச் சேர்ந்தவரும் கிடையாது. சிங்கப்பூரில் வசிக்கும் தன் தங்கையைப் பார்க்க வந்திருந்தவர், வந்த இடத்தில் இந்த சாகசங்களைச் செய்து தற்போது சிங்கப்பூர் ஜெயிலைச் சுற்றிப் பார்த்து வருகிறார்.
நியூசிலாந்தை சேர்ந்த இளம்பெண் கேட்டி கிறிஸ்டினா (27), சிங்கப்பூரில் ஆசிரியையாக பணியாற்றும் தனது தங்கையைப் பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது கிறிஸ்டினாவும், அவரது தங்கையும், தங்கையின் ஆண் நன்பரும் மதுபான விடுதிக்கு சென்று மதுகுடித்து ரசித்தனர். பின்னர் போதை ஏற்றி முடித்ததும் இரவு நேரத்தில் சகோதரி தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். வண்டியில் இருந்து இறங்கும் போது அளவுக்கதிகமான போதை தலைக்கேறியதால் கிறிஸ்டினா, குடியிருப்பு வளாகத்தில் அதிக சத்தம் எழுப்பி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதிக சத்தத்தைக் கேட்டவுடன் கதவைச் சாற்றிக் கொண்டு தூங்குவதற்கு அது என்ன இந்தியாவா? உடனே அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் போலீசில் புகார் செய்தனர். உடனடியாக வந்த 2 பெண் போலீஸ் அதிகாரிகள், கிறிஸ்டினாவை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

arrest

போலீஸ் நிலையம் வந்ததும், மீண்டும் வாகனத்தில் இருந்து இறங்கும் போது போதை தலைக்கேறியதால், போலீஸ் அதிகாரியின் கையை பலமாக கடித்தார் கிறிஸ்டினா. கடிப்பதைத் தடுக்க வந்த இன்னொரு பெண் போலீஸ் அதிகாரியின் முகத்தில் பலமாக குத்தினார். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்த சக போலீசார்  கிறிஸ்டினாவை மடக்கி பிடித்து சிறையில் தள்ளினார்கள். அதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு,  6½ மாதம் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். தன்னைப் பார்க்க வந்த இடத்தில் அக்காவிற்கு இப்படி நடந்து விட்டதே என்று சிங்கப்பூர் தங்கை கதறியழுதப்படியே இருந்தது பரிதாபமாக இருந்ததாக கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.