• April
    04
    Saturday

Main Area

Main



டெக்னோ கேமான் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்

Tecno Camon 15
Tecno Camon 15

டெல்லி: இந்தியாவில் டெக்னோ கேமான் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தியாவில் டெக்னோ கேமான் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி டெக்னோ கேமான் 15 மற்றும் டெக்னோ கேமான் 15 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஷௌல் கோல்டு, ஃபேசினேட்டிங் பர்ப்பிள் மற்றும் டார்க் ஜேட் ஆகிய நிறங்களில் டெக்னோ கேமான் 15 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அதேபோல ஐஸ் ஜாடைட் மற்றும் ஓபல் வைட் ஆகிய நிறங்களில் டெக்னோ கேமான் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

ttn

மேலும் டெக்னோ கேமான் 15 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல டெக்னோ கேமான் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன் மாடல்களும் பிப்ரவரி 25-ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகிறது. டெக்னோ கேமான் 15 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.3499 மதிப்புள்ள வயர்லெஸ் ஸ்பீக்கர் இலவசமாக வழங்கப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் 48 எம்.பி பிரைமரி கேமரா இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.