Home இந்தியா "உன்னை தொட மாட்டேன் ,பணம் கொடுக்காமல் விடமாட்டேன்" -பெண் என்ஜினீயரை கடத்திய டிரைவிங் கோச்.

“உன்னை தொட மாட்டேன் ,பணம் கொடுக்காமல் விடமாட்டேன்” -பெண் என்ஜினீயரை கடத்திய டிரைவிங் கோச்.


ஓட்டுநர் பயிற்சி கொடுக்க வந்த ஒருவர் தன்னிடம் பயிற்சி எடுக்கும் பெண்ணை கடத்தி பணம் பறித்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

Photo for representational purpose


புனேவில் உள்ள கோந்த்வா பகுதியில் வசிக்கும் 35 வயதான ஸ்ரீதேவி ராவ் ஒரு மென்பொறியாளர் ஆவார் .இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணி புரிகிறார்.இவர் இந்த தீபாவளி விடுமுறைக்காக தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார் .முன்னாள் ராணுவத்தினரான இவரின் தந்தை இந்த விடுமுறையில் தன் மகளுக்கு டிரைவிங் கற்று கொடுக்க முடிவு செய்தார் .அதனால் ராஜேஷ் சிங் என்பவர் தினமும் அவர்களின் வீட்டிற்கு வந்து அவர்களின் காரில் அவருக்கு டிரைவிங் பயிற்சி கொடுத்துள்ளார் .
எட்டு நாட்கள் நடந்த இந்த பயிற்சியில் அந்த ராஜேஷ் சிங் அவர்களிடமிருந்து நிறைய பணம் பறிக்க ஒரு மாஸ்டர் பிளான் போட்டார் .
அதன் படி எட்டாம் நாள் டிரைவிங் பயிற்சியின் போது சிங் அந்த பெண்ணை அவர்களின் காரில் ஒரு காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றார் .அப்போது அந்த பெண்ணிடம் அவர் உயிரோடு வீட்டிற்கு போக வேண்டுமானால் உடனே எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும்மென்று மிரட்டினார் .அதனால் பயந்து போன ஸ்ரீதேவி ராவ் உடனே அவரின் அக்கௌண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் பணத்தை அனுப்பினார் .பின்னர் அவர் அந்த பெண்ணின் தங்க சங்கிலியையும் பறித்து கொண்டார் .அதன்பிறகு அந்த பெண் அவரிடமிருந்து தப்பி வந்து அங்குள்ள காவல் நிலையத்தில் சிங் மீது புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்

மாவட்ட செய்திகள்

Most Popular

சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

வரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா... உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ...

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

தமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர்...

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன.
Do NOT follow this link or you will be banned from the site!