“இனி நமக்கு பிடிச்ச நேரத்துல சேரலாம்” – குரூப் வீடியோ காலில் செம அப்டேட் கொடுத்த வாட்ஸ்அப்!

“இனி நமக்கு பிடிச்ச நேரத்துல சேரலாம்” – குரூப் வீடியோ காலில் செம அப்டேட் கொடுத்த வாட்ஸ்அப்!

மக்களின் தகவல் தொடர்புக்கான மிக முக்கியமான செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. மற்ற சமூக வலைதளங்களைப் போல் அல்லாமல் பெர்சனலாக நமக்கு வேண்டப்பட்டவர்களிடம் சாட் செய்துகொள்ளலாம். இப்படி பல்வேறு வகையில் மற்றவையிடமிருந்து வாட்ஸ்அப் வித்தியாசப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களை தன்னகத்தில் கொண்டிருக்கிறது.

“இனி நமக்கு பிடிச்ச நேரத்துல சேரலாம்” – குரூப் வீடியோ காலில் செம அப்டேட் கொடுத்த வாட்ஸ்அப்!

பயனர்களின் அனுபவத்தைக் கூட்டும் வகையில் அவ்வப்போது புதுப்புது அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொடுக்கும். ஏற்கெனவே மூன்று புதிய அம்சங்களைக் கொண்டுவரவிருப்பதாக தகவல் வெளியானது. ஒரே சமயத்தில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை நான்கு சாதனங்களில் பயன்படுத்தும் அம்சம், மெசெஜ்களை மறைய வைக்கும் disappearing mode, ஒருவருக்கு போட்டோ அல்லது வீடியோ அனுப்பினால் அதை ஒருமுறை மட்டுமே பார்க்கும் view once என மொத்தமாக 3 அம்சங்கள் டெஸ்டிங்கில் உள்ளன.

“இனி நமக்கு பிடிச்ச நேரத்துல சேரலாம்” – குரூப் வீடியோ காலில் செம அப்டேட் கொடுத்த வாட்ஸ்அப்!

இச்சூழலில் வாட்ஸ்அப் தற்போது வீடியோ காலில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வீடியோ கால் செய்ய தனியாக ஒரு செயலியைப் பதவிறக்கம் செய்துகொள்வதற்குப் பதிலாக வாட்ஸ்அப் என்ற ஒரே செயலின் மூலமே வீடியோ கால் உள்பட அனைத்து வசதிகளும் உள்ளன. இதனால் பெரும்பாலோனோர் வாட்ஸ்அப் வீடியோகாலை பயன்படுத்துகின்றனர். இந்த வசதியை விரிவுப்படுத்தும் நோக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் சில நாட்களாக முயற்சி செய்துவந்தது. இதன் டெஸ்டிங் முடிவடைந்து இதற்கான அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.

“இனி நமக்கு பிடிச்ச நேரத்துல சேரலாம்” – குரூப் வீடியோ காலில் செம அப்டேட் கொடுத்த வாட்ஸ்அப்!

அதன்படி குரூப் வீடியோ கால் ஆரம்பித்த பிறகும் கூட நீங்கள் அந்த குரூப் காலுடன் இணையலாம். வாய்ஸ் குரூப் காலிலும் இதே வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. முன்பு ஆரம்பத்தில் யாரெல்லாம் வீடியோ காலில் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பேச முடியும். புதிதாக ஒருவரை இணைக்க முடியாது. ஆனால் இனி புதிதாக ஒருவரை இணைக்கலாம். அதேபோல பாதியில் வெளியேறி பின் மீண்டும் காலில் இணையலாம். ஏற்கெனவே 8 பேர் வரை இதில் கலந்துகொள்ளும் வசதியை வாட்ஸ்அப் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.