"623 கி.மீ. வேகம்; உலகின் ஃபாஸ்ட் எலக்ட்ரிக் விமானம்" - ரோல்ஸ் ராய்ஸ் சாதனை!

 
ரோல்ஸ் ராய்ஸ் விமானம்

ரோல்ஸ் ராய்ஸ் என்ற பெயரைக் கேட்டவுடனே கண்ணுக்கு குளிர்ச்சியாக மிகப் பிரமாண்டமான கார் தான் நியாபகம் தான் வரும். நடிகர் விஜய் நியாபகத்தில் வந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. ரோல்ஸ் ராய்ஸ் கார் போன்ற ஆடம்பர கார்கள தயாரிப்புக்கு பெயர்போன பிஎம்டபிள்யூ  நிறுவனம் தற்போது விமானம் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறது. மிகவும் குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எலக்ட்ரிக் எனப்படும் மின்சாரத்தின் மூலம் இயங்கக்கூடிய விமானத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.

Rolls-Royce develops its own electric plane in pivotal moment for aviation  - YouTube

இந்த நிறுவனம் மணிக்கு 623 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய எலக்ட்ரிக் விமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. ஏனெனில் உலகிலேயே இந்தளவு வேகத்தில் பறக்கக்கூடிய, செயல்படக்கூடிய அதிவேக எலக்ட்ரிக் வாகனம் இந்த விமானம் தானாம். 2017ஆம் ஆண்டில் சீமென்ஸ் ஈ ஏர்கிராஃப்ட் மூலம் இயங்கும் ஏரோபாட்டிக் விமானத்தின் முந்தைய சாதனையான மணிக்கு 213.04 கிமீ பறக்கும் வேகத்தை முறியடித்துள்ளது. இதனை பெருமிதமாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம். 

Rolls-Royce says its all-electric aircraft 'is world's fastest' - BBC News

விமானப் போக்குவரத்து துறையில் கால்தடம் பதிக்கும் விதமாக இந்த எலக்ட்ரிக் ரக விமானத்தை தயாரித்துள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.  முழுக்க முழுக்க மின்சாரத்திலேயே இந்த விமானம் இயங்கும் என்பதால், பெருமளவு கார்பன் வெளியேற்றம் குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு பிரிட்டன் அரசின் எரிசக்தி துறை நிதியுதவி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

Rolls-Royce's 300mph electric plane moves step forward as aerospace giant  finishes tech testing - Business Live

சர்வதேச விமான கூட்டமைப்பில் (FAI) மொத்தமாக மூன்று சாதனைகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளது. அதாவது மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் மணிக்கு 559.9 கி.மீ. வேகத்தில் சென்றது, 15 கிலோ மீட்டருக்கு மேல் மணிக்கு 532.1 கி.மீ. வேகத்தில் சென்றது, 202 நொடிகளில் 3000 மீட்டர் உயரத்தை எட்டியது என 3 சாதனைகள் இதில் அடங்கும்.