காப்புரிமை விதிகளை மதிக்காத கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4,405 கோடி அபராதம்!

 

காப்புரிமை விதிகளை மதிக்காத கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4,405 கோடி அபராதம்!

பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு ரூ.4,405 கோடி அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது தளத்தில் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும்போது அந்தச் செய்தி நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் அளிக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்புரிமை விதிகளில் ஒன்று.

காப்புரிமை விதிகளை மதிக்காத கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4,405 கோடி அபராதம்!

ஆனால் கூகூள் இந்த உத்தரவை மதிக்காமல் செய்தி ஊடகங்களிடம் சரியாக கலந்தாலோசிக்காமலும் உரிய கட்டணம் செலுத்தாமலும் இருந்து வந்தது. இதையடுத்து கூகுள் மீது சந்தை போட்டிகளைக் கண்காணிக்கும் பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பிடம் பிரான்ஸின் ஏஎஃப்பி, ஏபிக், எஸ்இபிஎ ஆகிய ஊடங்கங்கள் புகார் தெரிவித்தன. முன்னதாக இந்நிறுவனங்கள் தங்களின் செய்திகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்தும்போது “neighbouring rights” என்பதன் அடிப்படையில் உரிய பணப்பலன் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

காப்புரிமை விதிகளை மதிக்காத கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4,405 கோடி அபராதம்!

அதற்காக பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தன.ஆனால், அதற்கு கூகுள் நிறுவனம் ஒத்துழைக்காத நிலையிலேயே புகார் கொடுத்தன. இந்தப் புகாரில் முகாந்திரம் இருந்ததால் கூகுள் நிறுவனத்துக்கு 500 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.4405 கோடி) அபராதம் விதித்து ஒழுங்குமுறை அமைப்பு விதித்துள்ளது. செய்தி வெளியீட்டாளர்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்படும் என்று இன்னும் 2 மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால், நாள் ஒன்றுக்கு 9 லட்சம் யூரோ அதாவது ரூ.7.93 கோடி வீதம் அபராதம் கட்ட வேண்டும் என்று எச்சரித்துள்ளது.